Tuesday, March 30, 2010

நட்பை உணர்ந்தேன்

நீ என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில் தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பை.

Monday, March 29, 2010

பாசம் அதிகம்.


நான் நேசிப்பது
பூவையும், உன் மனசையும் தான்.
ஏனென்றால்,
பூவுக்கு வாசம் அதிகம்.
உன் மனசுக்கு பாசம் அதிகம்.

Sunday, March 28, 2010

எறும்பு ஏறுது சார்

மாணவன் : சார் என் தலையில எறும்பு ஏறுது சார்.


ஆசிரியர் : அத ஏண்டா நீ என் கிட்ட சொல்லுறா?

மணவன் : நீங்க தானே சார் சொன்னீங்க என் தலையில ஒன்னுமே ஏறாதுன்னு.

ஆசிரியர் : ? ? ?

Thursday, March 25, 2010

அமைதியாய் நின்றேன்


கடற்கரை மணலில் உன் 
பெயரை எழுதி வைத்தேன்,
அலை வந்து அடித்து சென்றது,
அமைதியாய் நின்றேன்.
உன் பெயராவது
குளிக்கட்டும் என்று.

ஒரு நிமிட புன்னகை


நீ பேசும் போது என்னை
மறக்க வைத்த உன்
வார்த்தைகளை விட,
நீ பேசாமல் சிரித்த
ஒரு நிமிட புன்னகை
என்னை
இந்த உலகத்தையே
மறக்க வைத்து விட்டது.

ஆயுள் வரை சந்தோசம்


அழகான உறவுகள் "ஒரு நிமிட
சந்தோசத்தை தான் தரும்" - ஆனால்
அன்பான உள்ளங்கள்
"ஆயுள் வரை சந்தோசத்தை தரும்"

நீ கலங்கி விட கூடாது .........




காற்று அடிக்கும் போது கூட
கண்களை மூடி
கொள்கிறேன்.
என் கண்ணுக்குள்
இருக்கும் நீ
கலங்கி விட கூடாது என்று.

நீ மட்டும் எனக்கு போதும்.


மீண்டும் ஒரு ஜென்மம் இருப்பது நிஜமானால்
நீ மட்டும் எனக்கு போதும்.
உறவாக அல்ல,
உயிரையே தரும் நட்பாக.

கேட்டுகிட்டே இருங்க


மனிதன் 1 :சூரியன் FM ல வேலைக்கு போனது தப்பா போச்சு.
மனிதன் 2 : ஏன்டா என்ன ஆச்சு.
மனிதன் 1 :சம்பளம் கேட்டா, கேளுங்க, கேளுங்க கேட்டுகிட்டே இருங்க என்று சொல்றாங்க.

Saturday, March 20, 2010

வேண்டும்.

என் ஆயுள் முழுவதும் உன் அன்பு வேண்டும்.
இல்லை என்றால்,
உன் அன்பு உள்ள வரை எனக்கு ஆயுள் வேண்டும்.

நம்பிக்கை



வலிகின்ற இதயமும்,
வடிகின்ற கண்ணீரும்
நிச்சயம்
ஒரு நாள் மாறும்.
உண்மையான
அன்பும்,
உறுதியான
நம்பிக்கையும்
இருந்தால்.

Friday, March 19, 2010

யாருக்கு தெரியும்...



உதடுகள் சிரிப்பது
ஊருக்கு தெரியும். - ஆனால்
உள்ளம் அழுவது
யாருக்கு தெரியும்...
உண்மையாக
நேசிப்பவர்களை தவிர.........

மனதில் பதிந்த காவியம்.,......

மறப்பதற்க்கு
நீ ஒன்றும் மணலில் வரைந்த
ஓவியம் அல்ல......
மனதில் பதிந்த
காவியம்.........

புரியும்......


நிலவை பார் !
கடவுளின் ரசணை
புரியும்....
சூரியனை பார் !
கடவுளின் சக்தி
புரியும்....
கண்ணாடி பார் !
கடவுளின் காமெடி
புரியும்....

Thursday, March 18, 2010

அத்தனையும் நீ



என் நந்தவனத்தில்
எத்தனையோ மலர் செடிகள்
என்னவோ தெரியவில்லை.
அத்தனையும்
நீயாகவே இருக்கிறாய்.
Welcome to My HOME