தமிழ்த்தோட்டம் ஜெபா
ஜெபாவின் தோட்டம்
Friday, January 14, 2011
நம்பிக்கை வேர்கள்
நம்பிக்கை
நார்
மட்டும்
போதும்
உதிர்ந்த
பூக்கள்
ஒவ்வொன்றாய்
வந்து
ஒட்டி கொள்ளும்.
நிழலாய் வருவானா ?
நான் கருவில் இருக்கையில்
என் கனவில் வந்தவன்
நான் உலகில் பிறக்கையில்
என் உணர்வுடன் பிறந்தவன்
நான் சிரித்து வளர்கையில்
என் சிந்தையில் சிரித்தவன்
நான் கனவு காண்கையில்
என்னுடன் வாழ்ந்தவன்
என் நிஜ வாழ்வில்
நிழலாய் வருவானா ?
Sunday, January 9, 2011
வேண்டும் நீ
நினைவுகள் நீங்கிய போதும்
நிழலாய் என்னில்......
கவிதைகள் கலைந்த நிலையிலும்
கனவாய் என்னுள்....
சூலால்கள் மாறினும் சுழலும்
காற்றாய் என்னில்...
கருமணிகள் அயர்ந்த போதும்
கண்ணீராய் என்னில்...
கவலைகள் மறந்த நிலையில்
புண் சிரிப்பாய் என்னுள்.....
சிட்டாய் நான் சிறகடிக்க
சிறகாய் என்னுள்...
என் மௌனங்கள் வடிவம் பெற
வார்த்தையாய் அணைக்கு...
என் வாழ்க்கை படகில்
படகோட்டியாய் எனக்கு....
வேண்டும் நீ ................
இளைஞனின் இதய குரல்
அறிவு இல்லை என்பதால்
அன்பு இல்லை என்று நினைத்தாயடி
அழகு இல்லை என்பதால்
என்னை அடியோடு வெறுத்தாயடி
அற்ப்புத விளக்காய் நான் இருப்பேன்
நான் உன் புடவைக்கு விலை கேட்டு வரவில்லையடி
உன் புன்னகைக்கு விலை கேட்டு வந்தேன்.
Friday, October 22, 2010
கடன் கொடுப்பாயா
அன்பே!!!
உன்னை கண்டதும்
மதி இழந்தேன்.....
நிலவே
உன்னை பார்த்ததும்
சொல்லிழந்தேன்.
வரம் கொடுப்பாயா
உன் காதலை ....?
கடன் கொடுப்பாயா
உன் இதயத்தை.....?
வெற்றி பெற
வெற்றியால்
மகிழ்ச்சி மட்டும் தன் கிடைக்கும் - ஆனால்
தோல்வியால் நல்ல அனுபவம், அதனால்
பக்குவம் கிடைக்கும்.
அனுபவம் தான்
வாழ்க்கையில்
வெற்றி பெற உதவும்.
Tuesday, July 13, 2010
ஒரு பொண்ணு
ஒரு பொண்ணு அழகாக தெரிவதால்
அவளை நீ நேசிக்கவில்லை.
நீ நேசிப்பதால் தான் அவள்
அழகாக தெரிகிறாள்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)