Tuesday, January 18, 2011

என்னுள்(நீ)......


நீ....
என்னிடம்
எதை வேண்டுமானாலும்
கேள்....
என்னுள்ளிருக்கும்
உன்னை தவிர

உன்னைப் போலவே


விலகுகையில் நெருங்கும்
நெருங்குகையில் விலகும்
உன்னைப் போலவே
மனதில் உதிக்கும்
என் கவிதை வரிகளும்!

அடடே..................


அன்பே
நான் பேசும் செல்போனுக்கு
நீண்ட ஆயுள்!
நீ எனக்காக தரும்
முத்தங்களை எல்லாம்
அது சேமிக்கிறதே!

Saturday, January 15, 2011

கிரிக்கெட்


வீரர்களுக்கு " சாதனை"
பந்துகளுக்கு "வேதனை"
பார்ப்பவர்களுக்கு "சோதனை"

கனவு


இமை கதவுகளை
சாத்தி விட்டேன்
எப்படி வந்தார்கள் இந்த
திருட்டு நண்பர்கள்.

என்னவளே .....


பொன் நகையை நீ கொண்டு
வர வேண்டாம்
புன்னாகையை கொண்டு
வந்தால் போதும்.

பணம் கோடி நீ கொண்டு வர வேண்டாம்
பண்பாடு நிறைய கொண்டு
வந்தால் போதும்.

வலம் வர வாகனங்கள் நீ கொண்டு
வர வேண்டாம்
வாழ்க்கை பாதையில் நாம் நடக்க
நல் வழிகளை கொண்டு
வந்தால் போதும்.

அழகு தேவதைஎன
நீ நடந்து வர வேண்டாம்
வருத்தத்தில் ஆறுதல் தரும்
இனியவளாய் வந்தால் போதும்..

காதலுக்கு மரியாதை


நடந்து சென்றேன்
பார்க்காமல் போனாள்.
சைக்கிளில் சென்றேன்
ஹாய் என்றாள்.
பைக்கில் சென்றேன்
அன்பே என்றாள்.
காரில் சென்றேன்
அத்தான் என்றாள்.
இவை அத்தனையும்
வாடகைக்கு என்றேன்
போடா என்றாள்.